Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்குப்பதிவு நாளன்று இலவச பேருந்து பயணம்..போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!

pink buses

Siva

, வியாழன், 18 ஏப்ரல் 2024 (08:31 IST)
60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கோவை போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதும் எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான வசதிகள் செய்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது கோவையில் 60 வயதுக்கு மேற்பட்டவர் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க ஏதுவாக இலவச பேருந்து பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கூறியபோது, ‘வாக்குப்பதிவு  நாளன்று அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பேருந்து பயணம் செய்து கொள்ளலாம்.

காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து  60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்  இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலன் தற்கொலை செய்தால் காதலி பொறுப்பேற்க முடியாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!