Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

90 வயது நண்பர் காலமானார்: கமல்ஹாசனின் இரங்கல் டுவீட்

Advertiesment
90 வயது நண்பர் காலமானார்: கமல்ஹாசனின் இரங்கல் டுவீட்
, செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:29 IST)
தனது 90 வயது நெருங்கிய நண்பர் காலமானதை அடுத்து டுவிட்டரில் கமல்ஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்
 
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி எழுத்தாளரான ஜான் கிளாட் கேரியார் என்பவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து இரங்கல் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
 
அந்த வகையில் ஜான் கிளாட் கேரியார் என்பவரின் மிகப்பெரிய வாசகர்களில் ஒருவரான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இதுகுறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
தனது 90ஆவது வயதில் அடியெடுத்து வைத்த உலகின், ஃபிரான்ஸ் நாட்டின், மிக முக்கிய எழுத்தாளரும், என் நண்பருமான ஜான் கிளாட் கேரியார் இன்று காலமானார். அவர் எழுத்துக்களும் மனித நேயமும் அவர் தொட்ட மனங்களால் தொடர்ந்து வாழும்’ என்று பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவிட்டை அடுத்து அவரது ரசிகர்களும் மறைந்த எழுத்தாளருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு – வேல்முருகன் உறுதி!