கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வந்த போது திமுகவினர் தாக்கியதாக நான்கு வருமானத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இன்று காலை முதல் கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில் சோதனை செய்தனர். அப்போது வருமானவரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நான்கு வருமானவரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுகவினர் தாக்கியதாக வருமானவரித்துறை பெண் அதிகாரி காயத்ரி உள்பட நான்கு அதிகாரிகள் அரசு மருத்துவமனை இதில் சிகிச்சை பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.