தமிழகத்தில் மலர்ந்தது 4 தாமரைகள்: முதல்முறையாக சட்டமன்றம் செல்லும் 4 எம்.எல்.ஏக்கள்
தமிழகத்தில் தாமரை மலராது என்றும் நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பெறும் என்றும் தாமரையை எந்த காரணத்தை முன்னிட்டும் மலர விட மாட்டோம் என்றும் திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறி வந்தன என்பது தெரிந்ததே
மேலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக ஜெயிக்க கூடாது என்பதற்காகத்தான் தான் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று கமலஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் அனைத்து கட்சிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்த பாஜக தமிழகத்தில் வெற்றி பெறுமா என்ற கேள்வி குறி தேர்தலுக்கு முன் இருந்தது. ஆனால் நேற்று தேர்தல் முடிவுகள் வரும்போது 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது
இதனை அடுத்து முதன்முதலாக தாமரை தமிழகத்தில் வளர்ந்து உள்ளது என்பதும் 4 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு செல்ல உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத்திற்கு செல்ல இருக்கும் நான்கு தான் பாஜக எம்எல்ஏக்கள் பெயர்கள் பின்வருமாறு
நாகர்கோவில் தொகுதி - எம்ஆர் காந்தி
கோவை தெற்கு தொகுதி - வானதி ஸ்ரீனிவாசன்
திருநெல்வேலி தொகுதி - நயினார் நாகேந்திரன்
மொடக்குறிச்சி தொகுதி - சரஸ்வதி