சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!

Mahendran
திங்கள், 27 அக்டோபர் 2025 (15:09 IST)
மதுரை வக்கீல் புதுத்தெரு சந்திப்பில் சாலையில் கிடந்த ஒரு சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக ரூ. 17.50 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது.
 
நேற்று இரவு  மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து வீடு திரும்பிய செல்வமாலினி என்ற பெண்மணி, சாலையின் நடுவே கிடந்த சாக்கு மூட்டையை காலால் உதைத்தபோது, உள்ளே 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருப்பதை கண்டார். உடனடியாக அவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார்.
 
மூட்டையை பிரித்துப் பார்த்தபோது, அதில் மொத்தம் ரூ.17,50,000 இருந்தது தெரிய வந்தது. நேர்மையாக செயல்பட்ட செல்வமாலினி அந்த பணத்தை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
 
இவ்வளவு பெரிய தொகை சாலை நடுவே கிடந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, மீட்கப்பட்ட இந்த தொகை ஹவாலா பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்ட பணமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments