Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லை: முன்னாள் எம்எல்ஏ வழக்கால் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 27 ஜூன் 2025 (11:22 IST)
சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என முன்னாள் எம்எல்ஏ ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தென்காசி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ டி.எஸ்.ஆர். வெங்கட்ரமணா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
அம்மனுவில், "நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநிலங்களில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை மத்திய அரசு வசூலிப்பது சட்டவிரோதம். இது அரசியலமைப்புக்கு எதிரானது.  ஏற்கனவே சாலை பராமரிப்புக்காக பல்வேறு வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது,ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் வாகனங்கள் கடந்து செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு மேல் ஆகிறது என்ற குற்றச்சாட்டு குறித்தும், நெடுஞ்சாலைத் துறை இயக்குநர்கள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments