Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக முன்னாள் அமைச்சர் கட்சியில் இருந்து நீக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் கட்சியில் இருந்து நீக்கம்
, வெள்ளி, 21 மே 2021 (18:47 IST)
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் 
 
இதுகுறித்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் கூட்டாக விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் நிலோபர் கபில் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என அறிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் திமுகவில் சேர இருப்பதாக வதந்தி ஏற்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.2000 இரண்டாம் தவணை எப்போது? முதல்வர் ஸ்டாலின் தகவல்