Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 வது முறையாக திமுக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்பாட்டம்.......

Advertiesment
3 வது முறையாக திமுக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணி தலைமையில்  ஆர்பாட்டம்.......

J.Durai

, புதன், 24 ஜூலை 2024 (18:26 IST)
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி...
 
உதய் மின் திட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் படி விவசாயிகளுக்கு மின் மீட்டர் பொருத்துவது மற்றும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தில் மாற்றம் செய்வது போன்ற இரண்டு சரத்துக்களும் எடுத்த பிறகுதான் அவர் மறைந்த பிறகு கடந்த ஜனவரி மாதம் 2017 ஆம் ஆண்டு 8 ஆம் தேதி நான் அந்த உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டேன்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் பாலகிருஷ்ணனும்  காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து இட்டதால் தான் தற்போது மின் கட்டணம் உயர்த்தும் சூழல் உள்ளதாக பொய் பிரட்சாரம் செய்து வருகின்றனர்
அவர்களுடன் நான் எங்கு வேண்டுமானாலும் அவர்கள் சொல்லும் இடத்தில் நேருக்கு நேர் நான் விவாதிக்க தயார்.
 
அப்படி இல்லை என்றால் அந்த பேச்சை இத்துடன் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
அப்படி இருந்து இருந்தால் 4 ஆண்டுகாலம் நாங்கள் எப்படி மின் கட்டணமே உயர்த்தாமல் ஆட்சி செய்திருக்க முடியும் மத்திய அரசு மின் கட்டணம் ஏற்றாமல் விட்டு இருப்பார்களா 
திமுக விற்கு ஜாளரா போட்டே இன்று கம்யுனிஸ்ட் ஒழிந்து விட்டது அவர்கள் ஆளும் கேரளாவிலும் உதய் மின் திட்டம்தான் செயல்பாட்டில் உள்ளது 
 
கடந்த 2021 ஆம் ஆண்டு 12,000 கோடி கடனில் தான் அதிமுக அரசு மின்சார வாரியத்தை விட்டு சென்றது ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது மின் கட்டணம் உயர்த்த பட மாட்டாது என தேர்தல் வாக்குறுதிகள் அளித்தனர்.
 
ஆனால் அதற்கு நேர் மாறாக கொரோனா காலம் முடிந்தவுடன் 50 சதவீத மின் கட்டணம் உயர்வு செய்தனர் அதனைத் தொடர்ந்து இதுவரை மூன்று முறை ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற கணக்கில் மின் கட்டணம் உயர்த்தி உள்ளனர்.
 
மின் கட்டணம் உயர்வால் 20000 கோடி வருகிறது மானியமாக பத்தாயிரம் கோடி வருகிறது மொத்தமாக
42000கோடி மின் கட்டண உயர்விற்கு 
பிறகு தமிழக அரசுக்கு வருவாய் வந்த பிறகும்   10, 000 கோடி இழப்பு என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளனர்.
 
அதைப் பற்றி கேட்டால் அதற்கு பதில் இல்லை. எங்கு தவறு நடக்கிறது என்று மக்கள் கவனிக்க வேண்டும்
 
ரேசன் கடைகளில் பருப்பு ஆயில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கிடைப்பதில்லை  மகளிருக்கு 1000 கொடுத்து விட்டு ரேஷனில் பருப்பை நிறுத்தி விட்டார்கள் கடையில் சென்று பருப்பு என்னை வாங்கினால் அந்த ஆயிரம் என்ன ஆகும் யோசித்து பாருங்கள்.
 
கள்ளச்சாராய சாவுகளுக்கு திமுக மாவட்ட செயலாளர் அருகில் அமர்ந்து தவறான தகவலை பேட்டி கொடுத்த மாவட்ட அட்சியரால் தான் மேலும் பலி  எண்ணிக்கைகள்  கூடியது.
 
தமிழ்நாடு கஞ்சா 24 மணி நேர மது என போதை நாடாக மாறி வர திமுக தான் காரணம்
 
கொலை கொள்ளை சம்பவங்களும் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது நாளைக்கு 5 கொலை என்றளவில் கடந்த 6 மாதங்களில் 200 கொலைகள் என  சென்று கொண்டே வருகிறது என்று பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய பட்ஜெட் - இந்திய வர்த்தக சபை வரவேற்பு!