Publish Date: Tue, 13 Jul 2021 (19:57 IST)
Updated Date: Tue, 13 Jul 2021 (19:58 IST)
திமுக அரசின் நடவடிக்கையால் மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி உள்ளது என்றும் நீட் தேர்வு இல்லை என்று மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து தற்போது வழக்கம் போல் ஏமாற்றி உள்ளது என்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா?" என மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு,
மாண்புமிகு அம்மா அரசு செயல்படுத்திய "நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அம்மா அரசு அளித்தது போல உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.