நீட் தேர்வு விஷயத்தில் இரட்டை வேடம் போட்ட அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் உயர்நீதிமன்றம் நெத்தியடி தீர்ப்பு அளித்துள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
நீட் ஆய்வு குழு தொடர்பான வழக்கு தீர்ப்பு இன்று உயர்நீதிமன்றத்தில் வெளியான நிலையில் நீட் ஆய்வு குழுவிற்கு தடை விதிக்க முடியாது என்றும் அந்த ஆய்வுக்குழு சட்டத்தை மீறியது அல்ல என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அந்த ஆய்வுக்குழு மீறவில்லை என்றும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது
மேலும் இந்த மனுவை தாக்கல் செய்த பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜனுக்கு தனது கடுமையான கண்டனத்தையும் நீதிபதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நீட் ஆய்வு குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தீர்ப்புக்கு வரவேற்பு அளித்ததாகவும் இரட்டைவேட பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்