அம்மா என்ன நிலையில இருக்காங்க… இப்போ போய் பதவி கேட்டு இருக்கே… என்ன ஆளுய்யா நீ?
அம்மா என்ன நிலையில இருக்காங்க… இப்போ போய் பதவி கேட்டு இருக்கே… என்ன ஆளுய்யா நீ?
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை கருதில் கொண்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வழக்கமான ஆரவாரம் இல்லாமல் சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயல்பாடு அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் பலரை கடுப்பேற்றியதாக தகவல்கள் வருகின்றன.
சசிகலாவின் சகோதரர் திவாகரன் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற அவரது குலதெய்வம் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவரிடம் சென்ற அந்த முன்னாள் அமைச்சர் தனக்கு மீண்டும் அமைச்சர் பதவி வாங்கி தருமாறு கேட்டிருக்கிறார். இதனால் கடுப்பான திவாகரன் அவரை திட்டி அனுப்பியிருக்கிறார்.
இந்த செய்தி அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில அமைச்சர்களின் கவனத்துக்கு போயிருக்கிறது. அவர்கள் அந்த முன்னாள் அமைச்சரை அழைத்து செம டோஸ் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள், அம்மா என்ன நிலையில இருக்காங்க, இந்த நேரத்துல போய் பதவி கேட்டு இருகே, என்ன ஆளுயா நீ? என கேட்டதாக தகவல்கள் வருகின்றன.
சில அமைச்சர்கள் அவருக்கு போன் செய்து அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்த முன்னாள் அமைச்சர் அமைதியாகிவிட்டாராம்.