Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியின் ’’அண்ணாத்த’’ பட தெலுங்கு போஸ்டர் ரிலீஸ்!

ரஜினியின் ’’அண்ணாத்த’’ பட தெலுங்கு போஸ்டர் ரிலீஸ்!
, வெள்ளி, 15 அக்டோபர் 2021 (13:16 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் தெலுங்கு போஸ்டர் ரிலீசாகியுள்ளது..

இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழில் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படம் அதே நாளில் தெலுங்கிலும் வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு டப்பிங் பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்து விட்டதாகவும் இந்த படத்தின் தெலுங்கு ரிலீசுக்கு தேவையான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், ரஜினியின் அண்ணாத்த படத்தின் தெலுங்கு போஸ்டர் ’’பெத்தண்ணா’’ என்ற பெயரில் தற்போது ரிலீஸாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோர் தெலுங்கிலும் பிரபலம் என்பதால் இந்த படம் தெலுங்கிலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதும் 4 ஹீரோக்கள் !