ரஷிய அதிபர் புதினுக்கு பிரபல கால்பந்து ஜாம்பாவான் போரை நிறுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பு 100 வது நாளை நெருங்கிக் கொண்டுள்ள நிலையில், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத் தடைகள் விதித்து வருகிறது.
ஆனால், இதனால் தங்கள் நாட்டிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என ரஸ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் உடனான போரை நிறுத்த வேண்டும் என பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பீலேம் ரஷ்ய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பை நிறுத்துங்கள், இந்த சண்டையால் வேதனை வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் தனக்கு பீலேவை பிடிக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.