Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்னிந்தியாவின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

தென்னிந்தியாவின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

J.Durai

, சனி, 6 ஜூலை 2024 (17:03 IST)
மோலிவுட்டின் முதல் உண்மையான ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான 'ஃபுடேஜ்' படத்தின்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
 
இந்த அற்புதமான அதிரடி திரைப்படத்தில்  முன்னணி நட்சத்திர நடிகை  மஞ்சு வாரியர் முதன்மைப் பாத்திரத்தில் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார்.
 
அஞ்சாம் பாதிரா, கும்பலங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம் என  பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய  புகழ்பெற்ற எடிட்டரான சைஜு ஸ்ரீதரன் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். எடிட்டிங்கில் இருந்து டைரக்டராக சைஜு மாறுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அவரது பன்முகக் கதை சொல்லும் திறமைக்கு சான்றாக ‘ஃபுட்டேஜ்’ அமைந்திருக்கிறது.
 
மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
 
மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பினீஷ் சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
 
இணை தயாரிப்பாளர்களான ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் ஆகியோருடன், லைன் புரொடியூசர் அனீஷ் சி சலீம் ஆகியோர் இந்த மாறுபட்ட திரைப்படத்தை உயிர்ப்பிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
 
ஷப்னா முகமது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோரின் கூட்டு முயற்சியின் மூலம் வடிவமைக்கப்பட்ட திரைக்கதை மற்றும் வசனங்களில் இப்படம் ஒரு  அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.
 
சந்தீப் நாராயண் வடிவமைத்த இத்திரைப்படத்தில் அஸ்வெகீப்சர்ச்சிங் இசைக்குழுவின் பாடல்களும், சுஷின் ஷியாமின் பின்னணி இசையும் அற்புதமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஷினோஸ் வினோதமான மற்றும் அழுத்தமான  காட்சிகளை ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் படம்பிடித்துள்ளார்.
 
அதே நேரத்தில் கலை இயக்குனர் அப்புண்ணி சாஜன் இந்த பரபரப்பான சவாரிக்கு சரியான கலை இயக்கத்தை அமைத்துள்ளார்.
 
நிக்சன் ஜார்ஜின் ஒலி வடிவமைப்பு, மைண்ட்ஸ்டின் ஸ்டுடியோவின் VFX மற்றும் சமீரா சனீஷின் ஆடை வடிவமைப்பு என  மிக அட்டகாசமான தொழில்நுட்ப குழு முழு உழைப்பைத் தந்துள்ளது.இந்த அற்புதமான குழுவின் உழைப்பில்  மோலிவுட்டில் புதிய கதை சொல்லலை அறிமுகப்படுத்தும், புதுமையான  அனுபவத்தை  இப்படம் தரும். 
 
“ஃபுட்டேஜ்” என்பது வழக்கமான படமல்ல, அட்டகாசமான நடிகர்கள், அற்புதமான தொழில் நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், மிகப்புதுமையான களத்தில், இதுவரையிலான திரையின் கதை சொல்லலை மாற்றி அமைக்கும் புதுமையான படமாக இப்படம் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!