Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோழியை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை - சி.சி.டி.வி. காட்சிகள் வைரல்!

Advertiesment
கோழியை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை - சி.சி.டி.வி. காட்சிகள் வைரல்!

J.Durai

கோயம்புத்தூர் , வியாழன், 30 மே 2024 (16:03 IST)
கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தடாகம் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதிகள் கருஞ்சிறுத்தை உலா வந்ததாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தடாகம் சோமையனூர் திருவள்ளுவர் நகர், பழனியப்பா லேஅவுட் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரின் வீட்டின் வளர்ப்பு கோழி இன்று அதிகாலை இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் மேய்ந்து மேய்ந்து கொண்டு, கூவி கொண்டு சத்தம் போட்டு உள்ளது. இதனை அந்த வழியாக சென்று சிறுத்தை கோழி மதில் மேல் இருப்பதை கண்டு அதனை லாவகமாக கவ்விக் கொண்டு சென்று உள்ளது.
 
இன்று அதிகாலை எழுந்த அந்த குடும்பத்தினர் கோழியின் இறக்கைகள் வீட்டின் முன் கிடந்ததைக் கண்டு அவர்கள் பொறுத்தி இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த பார்த்தார். அப்பொழுது மதில் மேல் இருந்த கோழியை கவ்விக் கொண்டு சிறுத்தை செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து அப்பகுதி மக்களிடம் மிகுந்த கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கூறி உள்ளார்.
 
மேலும் இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு வனத் துறையினர் பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாமீனை நீட்டிக்க கோரிய கெஜ்ரிவாலின் மனு..! அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!!