தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டம் என்பது காமராஜர் காலத்திலேயே கொண்டு வரப்பட்டது என்பதும், அதன் பிறகு எம்.ஜி.ஆர் காலம் முதல் தற்போது வரை பள்ளி குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் கனடா நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சத்தான உணவு வழங்கும் திட்டம் ஏப்ரல் 16 முதல் நடைபெறும் நடைமுறைப்படுத்தப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதன் மூலம் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்கும் என்றும் 4 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கனடா நாட்டில் சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்ட போது நான்கில் ஒரு குழந்தை போதிய சத்தான உணவு கிடைக்காமல் பள்ளிக்கு வருவதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து கனடாவில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு தேசிய அளவில் சத்துணவு திட்டம் கொண்டு வரும் திட்டம் இந்த ஆண்டு இந்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த திட்டத்திற்கு நன்கொடையாக வரும் பணம் மற்றும் மாகாண அரசின் பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அனைத்து மாணவர்களும் பயன் தரும் வகையில் முழுமையான சத்துணவு வழங்கும் திட்டமாக இது இருக்கும் என்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்
மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டத்திற்காக ஒரு பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.