Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் சிவசங்கர் காரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை..! பெரும் பரபரப்பு..!

Advertiesment
அமைச்சர் சிவசங்கர் காரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை..! பெரும் பரபரப்பு..!

Mahendran

, வெள்ளி, 29 மார்ச் 2024 (11:33 IST)
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்து விட்டதால் பறக்கும்படி அதிகாரிகளின் தீவிர சோதனை கடந்து சில நாட்களாக உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

ஆனால் அதே நேரத்தில் வியாபாரிகள், அப்பாவி சுற்றுலா பயணிகளிடமிருந்து தான் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும் இதுவரை ஒரு அரசியல்வாதியிடம் கூட பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் வணிகர் சங்கம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அரசியல் பிரபலங்களின் வாகனத்தையும் சோதனையை விட்டு வருவதாக கூறும் பறக்கும் படை அதிகாரிகள் இன்று அமைச்சர் சிவசங்கர் காரை நிறுத்தி சோதனை செய்ததாக கூறியுள்ளனர்

அரியலூர் இருந்து ஜெயங்கொண்டான் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்

ஆனால் அவருடைய காரில் எந்த பொருளும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அவர் தனது பயணத்தை தொடர அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அமைச்சரின் காரையே பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணுக்கெட்டிய வரை எதுவுமே தெரியவில்லை: மதுரை எம்பி சு வெங்கடேசன் குறித்து அதிமுக வேட்பாளர்..!