போதை பொருள் கடத்துவதற்காகவே அயலக அணியை திமுக உருவாக்கி உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வெளிநாட்டிற்கு போதை பொருள் கடத்தியதாக திமுக அயலக அணியின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜாபர் சாதிக்கிடமிருந்து 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் என்று எடப்பாடி குறிப்பிட்டார்.
எந்த கட்சியிலும் அயலக அணி இல்லை என்றும் திமுகவில் மட்டுமே உள்ளது என்றும் போதை பொருள் கடத்துவதற்காகவே அந்த அணியை உருவாக்கி உள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார்.
திமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதாக காவல் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவரை புகார் அளிக்கும் வகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினர்.