Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் பேனர்கள், கொடிகளுக்கு தடை: அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (18:16 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சிஎஸ்கே அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் ஏற்கனவே விற்பனையாகி முடிந்துவிட்ட நிலையில் இந்த போட்டியை நடத்த விடமாட்டோம் என ஒருசில அரசியல் கட்சிகள் மிரட்டல் விடுத்துள்ளன.
 
இருப்பினும் திட்டமிட்டபடி போட்டி நடந்தே தீரும் என்றும் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் உறுதிபட கூறிவிட்டது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மைதானத்திற்கு வரும் பார்வையாளர்கள் பேனர்கள், கொடிகள் கொண்டு வரக்கூடாது என்றும், அவை தடை செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
 
ஆனால் காவிரி, ஸ்டெர்லைட் உள்பட பல பிரச்சனைகள் குறித்த பதாகைகள் ஆயிரக்கணக்கில் தயார் நிலையில் இருக்கையில் இந்த திடீர் அறிவிப்பு இளைஞர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் தடையை மீறி பேனர்கள், தடைகள் எடுத்து செல்லப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments