Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று ஒரே நாளில் 5 மருத்துவர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 10 மே 2020 (13:26 IST)
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாமரர் முதல் பணக்காரர் வரை, சாதாரண குடிமகன் முதல் பதவியில் இருப்பவர் வரை தாக்கி வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக இங்கிலாந்து பிரதமர் மற்றும் இங்கிலாந்து இளவரசர் உள்பட பல விவிஐபிக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களை கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்ற இரவும் பகலும் போராடிவரும் மருத்துவர்கள், காவல்துறையினர் ஆகியோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என்று கருதப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி சென்னையில் இன்று ஒரே நாளில் 5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் செய்தி அதிர வைத்துள்ளது. மேலும் இந்த ஐவரில் ஒருவர் பெண் மருத்துவர் என்றும் கூறப்படுகிறது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் ஒருவருக்கும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 4 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து மருத்துவர்கள் ஐவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. சென்னையில் ஒரேநாளில் 5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியான தகவலாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறைந்த வேகம்.. மேலும் தாமதமாகும் ஃபெங்கல் புயல்! கரையை கடப்பது எப்போது?

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம்..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments