கோடம்பாக்கத்தை தாண்டிய ராயபுரம்! – சென்னை கொரோனா நிலவரம்!

ஞாயிறு, 10 மே 2020 (11:29 IST)
சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் ராயபுரத்தில் பாதிப்புகள் அதிகமாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலேயே சென்னைதான் அதிகமான கொரோனா பாதிப்புகள் கொண்ட மண்டலமாக உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 3350 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோடம்பாக்கம் பகுதியில் அதிகமான கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்ட நிலையில் சென்னையிலேயே அதிகமான கொரோனா பாதிப்பு உள்ள பகுதியாக கோடம்பாக்கம் இருந்தது. இந்நிலையில் மீண்டும் இராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்புகள் கோடம்பாக்கத்தை விட அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி ராயபுரத்தில் 571 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கோடம்பாக்கத்தில் 563 பாதிப்புகளும், திருவிக நகரில் 519 பாதிப்புகளும், தேனாம்பேட்டையில் 360 பாதிப்புகளும், அண்ணா நகரில் 248 பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கல்லாவை நிரப்ப வேறு வழியை பாருங்கள் – பொங்கிய ரஜினிகாந்த்!