அமைச்சர் ஜெயக்குமாரை குண்டுக்கட்டாக கடலுக்கு தூக்கிச்சென்ற மீனவர்கள்: தப்பி ஓடிய ஓ.எஸ்.மணியன்

சனி, 8 செப்டம்பர் 2018 (16:33 IST)
நாகை மாவட்டத்தில் தங்கமீன் விடும் விழாவில் கலந்துக்கொண்ட அமைச்சர் ஜெயக்குமாரை மீனவர்கள் குண்டுக்கட்டாக கடலுக்கு தூக்கிச்சென்றனர். 

 
நாகை மாவட்டத்தில் சிவபெருமானை வழிபடும் விதத்தில் தங்க மீனை கடலில் விடும் விழா ஆண்டுந்தோறும் நடைபெறும். இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஓ.எஸ்.மணியன் கலந்துக்கொண்டனர்.
 
அமைச்சர் ஜெயக்குமார் சிவபெருமானுக்காக கடலில் தங்க மீனை விட்டு எடுத்தார். மீனவர்கள் அமைச்சர் ஜெயக்குமாரை குண்டுக்கட்டாக கடலுக்கு தூக்கு சென்றனர். படகில் ஏறிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அலையின் சீற்றத்தை கண்டு பயந்து படகில் இருந்து இறங்கி கரைக்கு ஓடி வந்துவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் - கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு