Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளுநர் நிகழ்ச்சியில் பாஜகவினரை பின்னுக்கு தள்ளிய அதிமுகவினர்

ஆளுநர் நிகழ்ச்சியில் பாஜகவினரை பின்னுக்கு தள்ளிய அதிமுகவினர்
, வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (17:14 IST)
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதோடு, வளர்ச்சிதிட்ட பணிகளை கேட்டறிந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில்  கரூருக்கு இன்று (வெள்ளிக்கிழமை)  வருகை தந்த தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித்., கரூர் அருகே உள்ள கடவூரில் உள்ள சேவாப்பூர் இன்ப சேவா சங்கம் என்கிற தன்னார்வ தொண்டுநிறுவன அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட, முதல் வரிசையில் அ.தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் உள்ளிட்ட அ.தி.மு.க வினர் அந்த வரிசைகளை அபகரித்ததோடு, அரசு அதிகாரிகள் மாற்று இடத்தில் அமர்ந்தனர்.

இந்நிலையில் பா.ஜ.க கட்சியினர் கூட கடைசி வரிசையில் தான் பா.ஜ.க மாவட்ட தலைவர் நீ.முருகானந்தம் உள்ளிட்ட பா.ஜ.க வினர் ஒரத்தில் தள்ளப்பட்டனர். ஏற்கனவே, எல்லா நிகழ்ச்சிகளிலும் அ.தி.மு.க வினர் தான் ஆங்காங்கே முன்னுக்கு வரும் நிலையில் அரசு நிகழ்ச்சி அதுவும், ஆளுனர் ஆய்வு மற்றும் ஆளுநர் நிகழ்ச்சியில் கூடவா ? மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சிக்கு கூட இல்லாத அக்கறையாக அ.தி.மு.க வினர் முந்தியடித்தது ஏன் ? என்று குழப்பத்தில் மற்ற பா.ஜ.க வினரும் நடுநிலையானவர்களும் புலம்பிய நிலையில் நிகழ்ச்சியினை முடித்துக் கொண்டு வெளியேறினார்கள்.

சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலில் மேட்ச் பிக்ஸிங்: தெலங்கானாவில் ஆட்சி கலைப்பு பின்னணி என்ன?