சென்னையில் முதல் ஏசி புறநகர் ரயில் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை உள்பட சில நகரங்களில் புறநகர் ஏசி ரயில்கள் இயக்கப்படும் நிலையில், சென்னையில் ஏசி ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஏசி ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி சமீபத்தில் தொடங்கிய நிலையில், தற்போது அந்த தயாரிப்பு பணிகள் முடிவடைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஏசி புறநகர் ரயில் தயாரிக்கும் பணிகள், சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி ஆலையில் நிறைவடைந்துள்ளன. அதேபோல், அந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்ய ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சோதனை ஓட்டம் முடிந்த பின்னர், எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து ரயில்வே வாரியம் முடிவு செய்யும். அதன் பிறகு, அந்த வழித்தடத்தில் இந்த ரயில் இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முதன்முதலாக ஏசி புறநகர் ரயில் இயக்கப்பட இருப்பதை அடுத்து, பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.