Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

Mahendran
வியாழன், 20 பிப்ரவரி 2025 (10:16 IST)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த சுரேஷ் என்பவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹4 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 
 
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 19.02.2025 அன்று மாலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், திருத்தங்கல், திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த திரு.சுரேஷ் (வயது 38) த/பெ.செல்வராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
 
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.பால்பாண்டி (வயது 31) த/பெ.பிச்சைக்கனி என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
 
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது பள்ளி மாணவி மதிய உணவின்போது திடீர் மரணம்.. மாரடைப்பா?

இனி Unreserved பெட்டியில் 150 பேருக்கு மட்டுமே அனுமதி?? ரயில்வே அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் பயணிகள்!

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments