Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு முழுவதும் போராட்டம்; ஒரு வழியாக கட்டுக்குள் வந்த தீ!!

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2020 (12:07 IST)
3 ரசாயன கிடங்குகளில் பிடித்த தீக் கட்டுக்குள் வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தீயை அணைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த தீயை அணைக்க முடியாமல் இரண்டாவது நாளாக இன்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
 
இந்த பணியில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ரசாயணக் கிடங்குக்கு அருகில் பெட்ரோல் பங்க் வேறு இருப்பதால் தீ மேலும் பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.
 
3 ரசாயன கிடங்குகளில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் இரவு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட நிலையில், தீக் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், முழுமையாக தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments