Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

Mahendran
வியாழன், 27 மார்ச் 2025 (17:17 IST)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலுள்ள அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று  பிற்பகல், ரயில் நிலையத்திலுள்ள அலுவலகக் கட்டடத்தின் முதல் மாடியில் திடீரென தீ பரவி எரியத் தொடங்கியது.
 
சம்பவத்தை அறிந்தவுடன், வேப்பேரி பகுதியில் உள்ள தீயணைப்பு படையினர் உடனடியாகச் சென்று தீயைக் கட்டுப்படுத்தினர். அதனால் எந்தவொரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தொடக்கக்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
 
இந்நிலையில், காவல்துறையினர் தீ விபத்தின் காரணங்களை பற்றி மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்வால் ரயில் நிலையத்தின் சிக்னல் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதால் சில ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments