Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: எஃப்.ஐ.ஆர் மிஸ்சிங்; என்ன செய்கிறது போலீஸ்?

Advertiesment
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: எஃப்.ஐ.ஆர் மிஸ்சிங்; என்ன செய்கிறது போலீஸ்?
, புதன், 13 மார்ச் 2019 (20:50 IST)
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20-க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். 
 
இவ்வழக்கில் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நால்வர் மீதும் குண்டாஸ் பாய்ந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் பார் நாகராத் பெயரும் அடிப்பட்டது. இதனால், பார் நாகராஜ் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டார்.  
 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் சில வீடியோகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பார் நாகராஜ் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பதிவாகியுள்ளது. மேலும், பாலா என்பவனும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளான். 
webdunia
இந்த விவகாரம் இப்படி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்க, இந்த குற்ற செயல்களில் ஈடுபட்ட, 4 பேருக்கு எதிராக காவல்துறை பதிவு செய்த எப்ஐஆர் காப்பி ஆன்லைனில் பிளாக் செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் பதியப்படும் எஃப்.ஐ.ஆர் முறையே ஆன்லைனில் பதியப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 
 
அதாவது அதிகபட்சம் 72 மணி நேரத்துக்குள்ளாவது காவல் நிலையத்தில் போடப்பட்ட எஃப்.ஐ.ஆர் ஆன்லைனில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், பொள்ளாச்சி வழக்கில் நால்வர் மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆர் காப்பி இன்னும் ஆன்லைனில் பதியப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் டீ கடை விளம்பரத்துதரான அபிநந்தன்...?