Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிரிகளின் சூழ்ச்சி திருநாவுக்கரசன் தாயார் புலம்பல்! வைரலாகும் வீடியோ!

Advertiesment
எதிரிகளின் சூழ்ச்சி திருநாவுக்கரசன் தாயார் புலம்பல்! வைரலாகும் வீடியோ!
, புதன், 13 மார்ச் 2019 (19:32 IST)
பொள்ளாச்சியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கொடூர கும்பல் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரிடம் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி தங்கள் காம வலையில் விழவைத்து நகை , பணம் உள்ளிட்டவரை மோசடி செய்து பல பெண்களின் வாழக்கையை சின்னாபின்னமாக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 


 
தமிழகம் முழுக்க தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டுடிருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் அடுத்தடுத்து உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளது. 
 
இந்நிலையில் இந்த பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும்  திருநாவுக்கரசின் தாய் பிரபல ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் தனது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்றும்  அந்த வீடியோக்களில் இருப்பது என் மகனே இல்லை என்றும் கூறியுள்ளார். 
 
மேலும், என் மகன் குற்றவாளி இல்லை இது எதிராளிகளின் சதி என  பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு மக்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பார் நாகராஜ்: மேலும் 4 வீடியோகள் லீக்