வாக்காளர் பட்டியலில் பெயர்: இன்று கடைசி வாய்ப்பு!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (07:22 IST)
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கம் பெயரை நீக்க முகவரி மாற்ற உள்பட அனைத்து மாற்றங்களையும் செய்ய இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று இறுதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளில் இன்று இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளதை அடுத்து வாக்காளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
 
ஏற்கனவே கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் ஏராளமானோர் இந்த வசதியை பயன்படுத்தி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்டனர். அவ்வாறு கடந்த மாதம் இணைக்காதவர்களுக்கு நேற்றும் இன்றும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது 
 
நேற்று ஏராளமானோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் அல்லது பெயரை நீக்க விரும்புபவர்கள் மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரில் மாற்றம் செய்ய விரும்புபவர்கள், முகவரி மாற்றம் செய்ய விரும்புபவர்கள் இன்று அந்த வாய்ப்பை பயன்படுத்தி அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடந்து வரும் சிறப்பு முகாமுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் 
 
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க செல்லும் போது அடையாள அட்டை, 2 புகைப்படங்கள் மற்றும் இருப்பிடச் சான்றையும் எடுத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments