Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் கெளதமன் மகனை கைது செய்த போலீசார்.. என்ன காரணம்?

Advertiesment
சென்னை

Mahendran

, சனி, 17 மே 2025 (09:00 IST)
சென்னை அண்ணா நகர் பகுதியில் ஒரு வியாபாரி மீது வன்முறை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக இயக்குநர் கெளதமன் மகன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
அணகாபுத்தூர் காமராஜபுரம் அருகேயுள்ள கணபதி நகரைச் சேர்ந்த சண்முகம்  என்பவர்  ஒரு மளிகைக் கடையை நடத்தி வருகிறார். கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில், தனது குடும்பத்துடன் சண்முகம் அண்ணா நகர் 2-ஆவது அவென்யூவில் உள்ள ஓர் உணவகத்துக்கு தனது சொந்த ஆட்டோவில் சென்றிருந்தார்.
 
உணவு முடித்த பிறகு, வாகனத்தை எடுக்க சென்றபோது, அவர் ஆட்டோவில் இரண்டு இளைஞர்கள் மது அருந்திய நிலையில் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை சண்முகம் வலியுறுத்தியதும், இருபுறமும் வாக்குவாதம் முற்றிப் போனது. இதனால் கோபமடைந்த இருவர், சண்முகத்தை தாக்கினர். இதில் அவருக்கு முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
 
சண்முகம் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் அண்ணா நகர் போலீஸில் புகார் அளித்தார்.
 
விசாரணையில், தாக்கியவர்கள் பிரபல இயக்குநர் கெளதமனின் மகன் தமிழழகன்  மற்றும் அவரது நண்பர் சரத்  என தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
 
 தமிழழகன், நடிகர் தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!