Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சி தலைவர் யார்? அதிமுக தலைமை அலுவலகம் வெளியே மோதல்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (16:01 IST)
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் 65 இடங்களில் மட்டுமே வென்ற அதிமுக எதிர்கட்சி வரிசையில் இடம்பெற்றுள்ளது.
 
இந்நிலையில் அதிமுகவில் எதிர்கட்சி தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 
 
இந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், எதிர்கட்சியாக அதிமுக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
 
இதனிடையே, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தின் வெளியே கோஷமிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விட்டு விட்டு பெய்யும் கனமழை: விடுமுறை இல்லாததால் மாணவர்கள் அவதி..!

ஜமைக்காவில் கொள்ளைக் கும்பல் துப்பாக்கிச்சூடு! திருநெல்வேலி இளைஞர் பலி!

2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு: இணையத்தில் வெளியானது பாடத்திட்டம்..!

விஜய் யார் கூட வேணாலும் போகலாம்.. அதை போட்டோ எடுத்தது யாரு? கண்டுபிடிச்சு உள்ள தள்ளுவேன்! - அண்ணாமலை அதிரடி!

பயணிகள் படகுடன் மோதிய கடற்படை அதிவேக படகு! 13 பேர் மூழ்கி பலி! - மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments