Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் நாற்காலிக்குக் கவுரவம், கம்பீரம், கண்ணியம்- இசையமைப்பாளர் ட்வீட்

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (15:51 IST)
இன்று முதல்வராகப் பதவியேற்றுள்ள முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது

இந்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின்  கொளத்தூர் தொகுதியில் போட்யிட்டு 3 ஆம் முறை  வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களைச் சந்தித்து ஆட்சிமை அமைக்க உரிமைகோரினார் ஸ்டாலின்.

எனவே நேற்று மதியமே ஆட்சியமைக்குமாறு ஸ்டாலிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர்., எனவே நாளை ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் திமுக தலைவர் ஸ்டார் முதல்வராகப் பதவியேற்றார்.இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்களும்  மு.க,.ஸ்டாலினுடன் அவர்களுடன் இன்று  பதவியேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின் – பொது,பொதுநிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, காவல் உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், மற்றும்திறனாளிகள் நலன் ஆகிய துறைகளைக் கவனிக்கவுள்ளார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் சுப்பிரமணியபுரம், நாணயம், பசங்க, நாடோடிகள்2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், தனது டுவிட்டர் பக்கத்தில், ரொம்ப நாளைக்குப் பிறகு முதல்வர் நாற்காலிக்குக் கவுரவம், கம்பீரம், கண்ணியம் கிடைத்திருக்கிறது! @mkstalin @Udhaystalin எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments