அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் 65 இடங்களில் மட்டுமே வென்ற அதிமுக எதிர்கட்சி வரிசையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அதிமுகவில் எதிர்கட்சி தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், எதிர்கட்சியாக அதிமுக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
இதனிடையே, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தின் வெளியே கோஷமிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.