Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுபோதையில் மருமகளிடம் ரவுசு : மகனை குத்திக்கொன்ற தந்தை

Advertiesment
father killed his son
, புதன், 29 மே 2019 (16:20 IST)
குன்றத்தூர் திருவள்ளுவர் நகரில் உள்ள, மாணிக்கவாசகர்  தெருவில் வசித்துவந்தவர்  பாண்டியன் (69). இவருக்கு நாகராஜ் (27)என்ற மகன் இருந்தார் . இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவந்தார்.இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார்.
சம்பவ நாளன்று மதுகுடித்துவிட்டு வந்து மனைவி தீபாவிடம் தகராறு செய்துள்ளார் நாகராஜ். இதைத் தடுக்க முற்பட்டார் தந்தை பாண்டியன்.  ஆனால் தந்தையைப் பொருட்படுத்தாமால் மீண்டும் தகாத வார்த்தைகளைப் பேசி அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு இடைஞ்சல் தரும் வகையில் வாக்குவாதம் செய்துள்ளார் நாகராஜ்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், கோபாவேசத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் நாகராஜின் வயிற்றில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ்  ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
 
பின்னர் நாகராஜை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் மகனைக்கொன்ற பாண்டியனைக் கைது செய்து விசாரித்துவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி தற்கொலை; காதலன் என்கவுண்டர்: நெட்டில் லீக் ஆன ஆபாச வீடியோவால் விபரீதம்!