Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிவாரண முகாமில் நடந்த திருமணம்: மணமக்களுக்கு குவிந்த வாழ்த்துக்கள்

Advertiesment
நிவாரண முகாமில் நடந்த திருமணம்: மணமக்களுக்கு குவிந்த வாழ்த்துக்கள்
, திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (06:33 IST)
கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக லட்சக்கணக்கான பொதுமக்கள் முகாம்களில் தங்கியிருக்கும் நிலையில் அந்த நிவாரண முகாமில் ஒரு திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
கேரளாவில் அஞ்சு என்பவருக்கும், வைஜூ என்பவருக்கும் திருமணம் செய்ய ஏற்கனவே இருவீட்டார்களும் முடிவு செய்திருந்தனர். ஆனால் திடீரென பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் இருவீட்டார்களும் நிவாரண முகாம்களில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
 
webdunia
இந்த நிலையில்  திருமண தேதியில் திட்டமிட்டபடி நிவாரண முகாமிலேயே திருமணம் செய்ய மணமகள் வீட்டார் முடிவு செய்தனர். இதுகுறித்து மணமகன் வீட்டில் பேசியபோது அவர்களும் ஒப்புக்கொண்டதால் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் வைஜூ-அஞ்சு திருமணம் நடந்தது. முகாம்களில் தங்கியிருந்தவர்கள் மணமக்களுக்கு ஆசி வழங்கினர். மேலும் இந்த திருமணம் குறித்து அறிந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவிற்கு ரூ.34.89 கோடி நிதியுதவி வழங்கிய கத்தார் நாடு