மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து தனது கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது:
எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்.
அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறு முறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்!
வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்!
Edited by Mahendran