Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புத்தக வெளியீட்டுக்கு மறுநாள் விஜய்யுடன் ரகசிய சந்திப்பா? ஆதவ் அர்ஜுன் குறித்து பரவும் வதந்தி..!

புத்தக வெளியீட்டுக்கு மறுநாள் விஜய்யுடன் ரகசிய சந்திப்பா? ஆதவ் அர்ஜுன் குறித்து பரவும் வதந்தி..!

Mahendran

, திங்கள், 9 டிசம்பர் 2024 (15:56 IST)
’எல்லோருக்குமான தலைவர்’ என்ற அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட நிலையில், அதற்கு அடுத்த நாள் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுன் ரகசிய சந்திப்பு நடந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த புத்தக விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர் என்பதும், இருவருமே திமுகவை கடுமையாக விமர்சனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அதுமட்டுமின்றி, இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனனை சஸ்பெண்ட் செய்தும் நடவடிக்கை எடுத்திருந்தார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் புத்தக வெளியீட்டுக்கு மறுநாள் ஆதவ் அர்ஜூன், விஜய் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பின்போது எஸ்.ஏ. சந்திரசேகர் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகத்தான் ஆதவ் அர்ஜுன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு உண்மையில் நடந்ததா? அப்படி நடந்திருந்தால் இந்த சந்திப்பில் என்னென்ன பேசப்பட்டிருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை என்றும், முழுக்க முழுக்க வதந்தி என்றும் இன்னொரு தரப்பு கூறி வருகிறது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் கனமழை மற்றும் மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?