Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிளகாய் பயிரை தாக்கும் விநோத பூச்சிகளால் விவசாயிகள் கவலை !

மிளகாய் பயிரை தாக்கும் விநோத பூச்சிகளால் விவசாயிகள் கவலை !
, புதன், 19 பிப்ரவரி 2020 (22:09 IST)
மிளகாய் பயிரை தாக்கும் விநோத பூச்சிகளால் விவசாயிகள் கவலை !
கரூர் அருகே மிளகாய் பயிரை தாக்கும் விநோத பூச்சிகளால் விவசாயிகள் கவலை ! முற்றிலும் சேதமடைந்த மிளகாய் விவசாயம்.
 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புலியூர் அடுத்த லிங்கத்தூர், உப்பிடமங்கலம், ஜெகதாபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிளகாய் சாகுபடி தீவிரமாக செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது கடந்த சில வாரங்களாக ஒரு சில வித்யாச விநோதமான பூச்சிகளின் தாக்கத்தினாலும், ஒருவகை பேன் வகை பூச்சிகளினாலும் மிளகாய் சாகுபடி முற்றிலும் சேதமானதோடு, இனி அந்த விவசாயமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

லிங்கத்தூர் பகுதியினை சார்ந்த முருகேஷன் என்கின்ற இயற்கை விவசாயி, அவரது தோட்டத்தில் நாட்டு ரக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டும், அதில், என்ன பூச்சி என்றே தெரியாத அளவில் அதில் புழு ஏற்பட்டு அனைத்து மிளகாய்களையும் சேதப்படுத்தி முற்றிலும் அறுவடைக்கு இயலாத வகையில் மிளகாய் சாகுபடி தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மூன்று முறை பஞ்ச காவ்யம் அடித்தும் அந்த புழுக்கள் சாகாமல், அப்படியே இனப்பெருக்கம் ஆகி வருகின்றது. ஒரு முறை பூச்சிக்கொல்லி மருந்து அடித்தும் அந்த புழுக்கள் சாகாமல் உள்ளதாகவும்,. வேளாண் துறையினை சார்ந்தவர்கள் தோட்டக்கலை துறை அதிகாரிகள் வந்து இதற்கான தீர்வு கண்டுபிடிக்க வில்லை என்றும், இந்த மாதிரி பூச்சிகள் வினோத பூச்சிகளாகவும், ஒரு மிளகாயினை மனிதர்கள் கடித்தால் கண்ணில் தண்ணீர் வரும் நிலையில், அனைத்து மிளகாய்களையும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது ;போல சாப்பிட்டு வருவதாகவும் வேதனையாக தெரிவித்தனர்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியா நாட்டில் நீண்ட நாள் தங்க ஒரு வாய்ப்பு மற்றும் பிற செய்திகள்