தமிழகம் முழுவதும் இன்று கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் இறக்கி அருந்தும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சீமான், போராட்டத்தில் கலந்து கொண்டதோடு மேடையில் விவசாயிகளுடன் கள் அருந்தியதாக கூறப்படுகிறது.
பனை மரத்திலிருந்து நன்மை பயக்கத்தக்கக்கூடிய பொருட்கள் ஏராளமாக நமக்கு கிடைக்கிறது என்றும் அதில் ஒன்றுதான் கள் என்றும் மருத்துவம் குணம் கொண்ட இதனை டாஸ்மார்க் மது வகைகளுக்கு பதிலாக பயன்படுத்தலாம் என்றும் ஏற்கனவே சீமான் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் 38 ஆண்டு காலமாக தடை நீடித்து வரும் நிலையில் தற்போது தடையை நீக்க போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .