திருவண்ணாமலை அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடிய நிலையில் அவர்களில் ஏழு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. ஏற்கனவே ஆறு பேர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அருள் என்ற விவசாயி மீது மட்டும் குண்டர் சட்டம் ரத்து செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது. முன்னதாக தனது கணவர் அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது மனைவி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அருள் எந்த ஒரு தீவிரவாத கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான முகாந்திரம் இல்லாத நிலையில் மக்களை தூண்டியதாகவும் நிலம் வாங்க முன் வருபவர்களை தடுத்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
100 நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்துள்ள நிலையில் உள்நோக்கத்தோடு தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கருதுகிறோம் என்று நீதிபதிகள் கருத்துக்களை பதிவு செய்தனர்
இந்த நிலையில் விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.