இன்னும் 12 மணி நேரத்தில் ஃபானி புயல் உருவாகி, வரும் 30 ஆம் தேதி மாலை வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனால் கனமழை இருக்ககூடும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
சென்னையில் இருந்து 1,210 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த மண்டலம் ஏப்ரல் 30 ஆம் தேதி வட தமிழகம் நோக்கி புயலாக வரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ் மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஃபானி புயலாக வலுப்பெறுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபானி புயல் 30 ஆம் தேதி மாலை வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையல் அறிவிப்பை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.