Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சன் டிவி சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகை

Advertiesment
Sun TV serial
, செவ்வாய், 14 ஜூலை 2020 (23:55 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரொனா தொற்றால்  பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பரவிவரும் இந்தத் தொற்றால் இதுவரை ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிகப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த தொற்றைத் தடுக்க அரசு வரும் ஜூலை 31 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  மக்கள் கொரொனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,   சினத்திரை படப்பிடிப்பு  ஜூன் 1 முதல் 60 பேருடன் படப்பிடிப்பு நடத்தலாம் என  அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 19 முதல் சென்னை உள்ளிட்ட நானு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. 

எனவே,  சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அக்னி நட்சத்திரம்  தொடரில் அகிலாவாக நடித்து மக்களிடம் பிரபலமாக உள்ள மெர்ஷீனா அந்த்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்,  கொரோனா காலத்தில்  ஷீட்டிங்கில் கலந்து கொள்வது ஆபத்தானது அதான்ல் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னையில் கொரோனா தொற்று  அதிகமாகவுள்ளது  எனக்குப் பதிலாக சண்டிவியின் வேறு நடிகை நடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் !