Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி மாணவிக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்காததால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

பள்ளி மாணவிக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்காததால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

J.Durai

, சனி, 15 ஜூன் 2024 (11:47 IST)
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மலையடிவாரா கிராமம் ஏத்த கோவிலில் இருபதிற்கும் மேற்பட்ட  பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
 
பல ஆண்டு காலமாக வழக்கமாக இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ் டி பிரிவு பழங்குடியின சாதி சான்று
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல்  இருந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இதனால் இங்கு படிக்கும் குழந்தைகள் பள்ளி படிப்பு  முடித்து உயர்கல்விக்கு செல்வதிலும் அரசு நலத்திட்டங்கள் பெறுவதிலும் வேலைவாய்ப்புக்கு  செல்வதிலும் தடங்கல் இருந்து வருகிறது.
 
இங்கு வசிக்கும் கருப்பசாமி என்பவரது மகள் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்வதற்கு சாதிச்சான்று கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பித்தும் ஆண்டிபட்டி வருவாய்துறை அதை வழங்கவில்லை
 
இதையடுத்து அவர் ஆண்டிபட்டி கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் என அனைவரிடம் புகார் செய்தும்  இதுவரை வழங்காமல் தாமதப்படுத்தப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.
 
இதனால் கோபமடைந்த கருப்பசாமி தனது மகள் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஆண்டிபட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வந்து  கிராம நிர்வாக அலுவலரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
இதையடுத்து  ஆண்டிபட்டி வட்டாட்சியர்  அலுவலகத்தில் இருந்து வந்த வருவாய்த்துறையினர் அலுவலகத்திற்கு  வரும்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  அழைத்துச் சென்றதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 வயது சிறுமி கர்ப்பம்.. 17 வயது சிறுவன் தான் காரணம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!