Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

15 வயது சிறுமி கர்ப்பம்.. 17 வயது சிறுவன் தான் காரணம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

15 வயது சிறுமி கர்ப்பம்.. 17 வயது சிறுவன் தான் காரணம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

, சனி, 15 ஜூன் 2024 (11:46 IST)
சென்னையில் 15 வயது சிறுமி 17 வயது சிறுவனால் கர்ப்பம் ஆக்கப்பட்ட நிலையில் போலீசார் போக்சோ சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
சென்னை புளியந்தோப்பு பகுதியில் 15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுவனுடன் பழகிய நிலையில் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து நெருக்கமாக இருந்ததாகவும் கடந்த எட்டு மாதங்களாக இவர்கள் நெருக்கமாக இருந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
 
இந்த நிலையில் சிறுமியின் வயிற்றை பார்த்து சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்தபோதுதான் அவர் கர்ப்பம் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து சிறுமியை விசாரித்த போது 17 வயது சிறுவனுடன் பழகியதை அவர் கூறியுள்ளதை அடுத்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏ.ஐ. தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது..! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..!!