Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாஃப் ரேட் ஹாஃப் ரேட்ன்னு ஆப்பு வைத்த போலி ஆசிரியை!!!

ஹாஃப் ரேட் ஹாஃப் ரேட்ன்னு ஆப்பு வைத்த போலி ஆசிரியை!!!
, வெள்ளி, 25 ஜனவரி 2019 (09:36 IST)
வீட்டு உபயோகப் பொருட்களை பாதி விலையில் கொடுப்பதாக கூறி போலி ஆசிரியை ஒருவர் பெண்ணை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் வனிதா. இவர் வீட்டில் இருந்தபடியே தையல் தொழில் செய்து வருகிறார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
 
இந்ந்நிலையில் கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டில் வனிதா தனியாக துணி தைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு டிப் டாப்பாக ஒரு பெண்மணி வந்தார். நீங்கள் யார் என வனிதா அந்த பெண்ணிடம் கேட்க, அந்த பெண் நான் ஒரு ஆசிரியை. எனது தோழி ஒருவர் பணி டிரான்ஸ்பர் பெற்றுள்ளார்.
 
அவரது வீட்டிலுள்ள டிவி, பிரிட்ஜ், வாசிங் மெஷின் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயாகப்பொருட்களை எடுத்து செல்வதற்கு வண்டி வாடகை அதிகமாக இருப்பதால், அவர் அதனை பாதி விலையில் விற்க இருக்கிறார். அவை அனத்துமே புதுசு என ரீல் விட்டார். 
 
இதனை உண்மை என நம்பிய வனிதா, பொருட்களை வாங்க 36 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் அந்த பெண்ணுடன் சென்றுள்ளார். பாதி வழியில் ஆட்டோவை நிறுத்திய அந்த பெண் வனிதாவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு பொருட்களை எடுத்து வருவதாக கூறி சென்றார்.
 
வெகுநேரமாகியும் அந்த பெண் வராததால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வனிதா காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவர்கள் சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த போலி ஆசிரியையை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரியாணி மசாலா விக்குறது ஒரு குத்தமா?: சிவசேனாவின் அட்ராசிட்டி போராட்டம்