Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேன்சி ஸ்டோரில் ரகசிய அறை அமைத்து கள்ள நோட்டு அச்சடிப்பு: மேட்ட்ரில் 3 பேர் கைது..!

Advertiesment
பேன்சி ஸ்டோரில் ரகசிய அறை அமைத்து கள்ள நோட்டு அச்சடிப்பு: மேட்ட்ரில் 3 பேர் கைது..!
, திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (11:54 IST)
வெளியே பேன்சி ஸ்டோர் வைத்து உள்ளே கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 
 
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் வேலை செய்யும் அண்ணாதுரை என்பவர் கோழி வாங்க சென்றுள்ளார். அப்போது அவர் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டு சற்று வித்தியாசமாக இருந்ததை அடுத்து கோழிக்கடைக்காரர் சந்தேகம் அடைந்து காவல்துறையினர்களிடம் அவரை பிடித்து கொடுத்தார் 
 
காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தபோதுதான் பேன்சி ஸ்டோரில் கள்ள நோட்டு அச்சடிப்பதற்கு தனி அறை உள்ளது என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து பேன்சி ஸ்டோரைஉ சோதனை செய்தபோது கலர் பிரிண்டர் செல்போன்  உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 
 
இந்த கடையின் உரிமையாளர் உரிமையாளருக்கு கடன் இருப்பதால் அந்த கடனுக்காக தனி அறை அமைத்து கள்ள நோட்டை தயார் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை என்ன? இன்னும் குறையுமா?