புதுக்கோட்டையில் உள்ள ஜுவல்லரி கடையில் 1643.36 கிராம் போலி தங்க நகைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்க நகைகளை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சிறு சிறு சேமிப்பில் இருந்து வாங்கி வரும் நிலையில், அந்த தங்க நகைகளை அவசரத் தேவைக்கு அடமானம் வைத்து பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது தெரிந்தது.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் உள்ள பாலாஜி ஜுவல்லரி என்ற கடையில் பிஐஎஸ் அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தினர். போலி தங்க நகைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், பிஐஎஸ் அதிகாரிகள் சோதனையின் போது, 1,643 கிராம் போலி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை இல்லாததால், நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும், இதன் மதிப்பு ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கடை அந்த பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில், இதற்கு முன் கிலோ கணக்கில் போலி நகைகளை விற்பனை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த கடையில் தங்க நகைகள் வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், அவர்கள் காவல்துறையில் புகார் அளிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இன்னும் எத்தனை கடைகளில் இதுபோன்ற போலி தங்க நகைகள் விற்பனை செய்கிறார்களோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.