கோபி பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் கொடுக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டை தொங்கவிட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து காலை, மாலை, இரவு வேலைகளில் ரூ.10 கொடுத்து தோசை, இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகளை வாங்கிச் சாப்பிட்டுச் செல்கின்றனனர்.
தினமும் விற்பனையாகும் பணத்தை நகராட்சியில் செலுத்தி வருகின்றனர். இங்குள்ள பணம் எண்ணும் இயந்திரத்தில் ஒருவர் கொடுத்த 10 ரூபா கள்ள நோட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அதை அம்மா உணவக ஊழியர்களிடம் திருப்பிக் கொடுத்தனர். இதைப் பெற்ற அவர்கள் அம்மா உணவகத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.
இது அங்கு வந்து சாப்பிட வரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இப்படி கள்ள நோட்டு என்று எழுதி தொங்கவிட்டுள்ளளதாக கூறியுள்ளனர்.