Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுத்தெருவில் நிற்கும் தேமுதிக: கழற்றிவிட்ட திமுக மற்றும் அதிமுக?

நடுத்தெருவில் நிற்கும் தேமுதிக: கழற்றிவிட்ட திமுக மற்றும் அதிமுக?
, புதன், 6 மார்ச் 2019 (15:55 IST)
அதிமுகவில் தேமுதிக கூட்டணி வைக்கப்போகிறது என சொல்லப்பட்ட நிலையில் தற்போது அது நடைபெறாது எனவே தெரிகிறது.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக ஏற்கனவே தனது கூட்டணிகளை உறுதி செய்திவிட்ட நிலையில், கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்க வேண்டிட கட்டாயத்தில் அதிமுக உள்ளது. அதிமுக தேமுதிக கூட்டணிதான் இழுபறியில் உள்ளது. 
 
அதிமுக சார்பில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக கொடி மற்றும் புகைப்படம் இல்லாததால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் சற்று முன்னர் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்தின் படமும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் படமும் வைக்கப்பட்டது. இதனால் தேமுதிக - அதிமுக கூட்டணி உறுதி என கூறப்பட்டு வந்தது.
 
இதற்கிடையே பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், கூட்டணி தொடர்பாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீசிடம் பேசி வந்த அதே நேரத்தில் தேமுதிக மூத்த நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசியது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து விளக்கமளித்த துரைமுருகன், தேமுதிகவை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், தங்களிடம் சீட் இல்லை எனவும் கூறிவிட்டார்.
 
அடுத்ததாக மீண்டும் தற்போது பொதுக்கூட்டத்தில் தேமுதிக கொடி மற்றும் விஜயகாந்தின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. தெளிவான முடிவெடுக்காததால் தேமுதிக இப்பொழுது செய்வதறியாது முழித்துக்கொண்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரகாஷ் ராஜுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு – கிடைக்குமா வெற்றி ?